மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் ஆடும் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் அன்சுல் கம்போஜ் (24) சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அணியில் இடம்பெற்றிருந்த அர்ஷ்தீப் சிங்கின் கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கம்போஜ், இந்தியா ஏ அணியில் கடந்த மாதம் இடம் பெற்றிருந்தார். 3 நாள் போட்டிகள் 2ல் ஆடிய அவர் 5 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
Advertisement