டெல்லி: இந்தியாவில் உள்ள பெருங்கோடீஸ்வரர்கள் பட்டியலில் நடிகர் ஷாருக்கான் இடம்பிடித்தார். 2025ம் ஆண்டு இந்தியாவின் பெருங்கோடீஸ்வரர்கள் பட்டியலை ஹூரன் அமைப்பு வெளியிட்டுள்ளது. ரூ.12,490 கோடி சொத்து மதிப்புடன் பெருங்கோடீஸ்வரர்கள் பட்டியலில் நடிகர் ஷாருக்கான் இடம்பிடித்தார். ரூ.21,190 கோடி சொத்து மதிப்புடன் சென்னை இளைஞர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் பட்டியலில் இடம்பிடித்தார். பெருங்கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரூ.9.55 லட்சம் கோடியுடன் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். ரூ.8.15 லட்சம் கோடியுடன் அதானி குழுமத்தின் கவுதம் அதானி 2வது இடத்தில் உள்ளார்.
+
Advertisement