சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், இந்திய ராணுவ வீரர்களுக்கான பாராட்டு விழா மற்றும் அவர்களின் சேவைக்கு நன்றி தெரிவித்து சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி, தென்னிந்திய பகுதிக்கான ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கரண்பீர்சிங் பிரார் பங்கேற்றனர். விழாவில்ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: இந்திய ராணுவம் என்பது ஒரு குடும்பம் போல, நமது நாட்டின் சிறந்த பகுதியாக இருக்கிறது.
நமது ராணுவம் எப்போதும் நெறிமுறையுடன் செயல்படுகிறது, எவ்வளவு சிக்கலான சூழ்நிலையிலும், அரசியல்துறை மற்றும் ராணுவம் இடையிலான நல்ல ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். முக்கிய நடவடிக்கைகளில் அதனை நாம் தெளிவாகக் கண்டிருக்கிறோம். உங்கள் வீரமும், தியாகமும் நம்மை ஒன்றிணைக்கிறது. நீங்கள் நாட்டின் பெருமை. இவ்வாறு அவர் பேசினார்.