கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 125 கிமீ தொலைவில் உள்ள நிகவேரட்டியா வில் நா உயன ஆரண்ய சேனாசனய மடம் உள்ளது. வனப்பகுதியில் மலை மீது அமைந்துள்ள இந்த மடத்திற்கு செல்ல ரோப் கார் வசதி உள்ளது. நேற்று முன்தினம் ரோப் காரில் துறவிகள் சென்ற போது திடீரென அறுந்து விபத்துக்குள்ளானது. இதில், தலா ஒரு இந்தியர், ரஷ்யர், உரோமானியர் உட்பட 7 புத்த துறவிகள் பலியாகினர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். அவர்களில் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
+
Advertisement