Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இந்தியன் ஆயில் கழகத்தில் 523 அப்ரன்டிஸ்கள்

1. டெக்னீசியன் அப்ரன்டிஸ்:

பயிற்சியளிக்கப்படும் பிரிவுகள்- மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன், சிவில், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ். தகுதி: சம்பந்தப்பட்ட இன்ஜினியரிங் பாடத்தில் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி.

2. டிரேடு அப்ரன்டிஸ்: பிட்டர்/எலக்ட்ரீசியன்/எலக்ட்ரானிக்ஸ்/மெக்கானிக்கல்/ இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்/மிஷினிஸ்ட் ஆகிய ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

3. கிராஜூவேட் அப்ரன்டிஸ்:குறைந்தது 50% மதிப்பெண்களுடன் ஏதாவதொரு பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

4. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (பிரஷ் அப்ரன்டிஸ்) தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. டொமஸ்டிக் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ( ஸ்கில் சர்ட்டிபிகேட் ஹோல்டர்ஸ்): தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் டோமஸ்டிக் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பயிற்சி பெற்று சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

வயது: 30.09.2025 தேதியின்படி 18 முதல் 24க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படியும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

டிரேடு வாரியாக ஏற்பட்டுள்ள காலியிடப் பகிர்வு விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் எழுத்துத் தேர்வு, கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், சான்றிதழ் சரி பார்த்தல் அடிப்படையில் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.உதவித் தொகை இந்தியன் ஆயில் கழக விதிமுறைப்படி வழங்கப்படும்.பிளஸ் 2 படித்தவர்கள் டிரேடு அப்ரன்டிஸ் பயிற்சிக்கு www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், டெக்னீசியன் அப்ரன்டிஸ் மற்றும் கிராஜூவேட் அப்ரன்டிஸ் பயிற்சிக்கு www.ntas.education.gov.in என்ற இணையதளங்கள் மூலமாக ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின்பு www.plapps.indianoilpipelines.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.10.2025.