கனடா: இந்திய துணை தூதரகத்திற்கு பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவில் காலிஸ்தான் ஆதாராளரான ஹர்தீப்சிங் நிஜார் கடந்த 2023ம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஷரின் நகரில் படுகொலை செய்யப்பட்டார். அவரது படுகொலையை தொடர்ந்து இந்திய அரசுக்கு இதில் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் த்ருடோ குற்றம்சாட்டி இருந்தார். இந்த அக்குற்றச்சாட்டை இந்தியா முற்றிலும் மறுத்தது. இந்த கொலை வழக்கில் 4 இந்தியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் கனடாவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் வழிபாடு தளங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பிறகு இந்தியா கனடாவுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனை அடுத்து கனடா பிரதமராக மார்க் கார்னி பதவியேற்ற பிறகு இந்தியா, கனடா இடையேயான உறவு படிப்படியாக திரும்பி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு கனடாவில் செயல்பட்டு வரும் காலிஸ்தானின் ஆதரவு பெற்ற சிகேஎஸ் பார் ஜஸ்டிஸ் என்ற பயங்கரவாத அமைப்பு இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பிரதமர் ஹர்தீப்சிங் நிஜார் படுகொலையில் இந்தியர்களுக்கு பங்கு இருப்பதாக முன்னாள் பிரதமர் ஜஸ்டின் பார்லிமென்டில் தெரிவித்திருந்தார். ஆனால் 2 ஆண்டுகள் கடந்தும் இந்திய தூதரகங்கள் காலிஸ்தான் இயக்கத்தினரை குறிவைத்து உலக வலையமைப்பை உருவாக்கி உள்ளனர். இதனால் நாளை காலை 8 மணிக்கு தொடங்கி 12 மணிக்குள் 4 மணி நேர்தத்திற்குள் இந்திய தூதரகத்தை முற்றுகை இட போவதாக அறிவித்துள்ளனர். அதே சமயம் இந்திய தூதரகத்திற்கு வர நினைப்பவர்கள் வர வேண்டாம் என மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி கனடாவின் இந்திய தூதர் தினேஷ் பட்நாயக் முகம் கொண்ட போஸ்டரை பயங்கர வாதிகள் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.