Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்திய கடலோர காவல்படையில் பல்வேறு பணிகள்

பணியிடங்கள் விவரம்:

1. ஸ்டோர்கீப்பர்- கிரேடு-1: 1 இடம் (ஒபிசி) வயது: 18 லிருந்து 25க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் அல்லது வணிகவியல்/பொருளியல்/ புள்ளியியல்/பொது நிர்வாகம் உள்ளிட்ட பாடங்களில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம்.

2. ஸ்டோர்கீப்பர்- கிரேடு-2: 1 இடம் (எஸ்சி). வயது: 18 லிருந்து 25க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம்.

3. லஸ்கர்: 2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1). வயது: 18 லிருந்து 30க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம்.

4. பல்நோக்கு பணியாளர் (சவுதிகார்): 1 இடம் (எஸ்சி). வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, டிரேடு தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indiancoastguard.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.10.2025.