லண்டன்: 2025 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் ஜெய்ஸ்மின் லம்போரியா இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். காமன்வெல்த் விளையாட்டுப் பதக்கம் வென்ற ஜெய்ஸ்மின், 57 கிலோ எடை பிரிவில் இறுதிப் போட்டியில் போலந்தின் ஜூலியா ஸ்ஸெரெமெட்டாவை தோற்கடித்து பதக்கம் வென்றார். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ஜூலியா வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
ஜெய்ஸ்மின் முதல் சுற்றில் பின்தங்கியிருந்தார், இரண்டாவது சுற்றில் மீண்டும் எழுச்சி பெற்றார். பின்னர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ஜெய்ஸ்மின் போலந்து குத்துச்சண்டை வீராங்கனையை 4-1 என்ற கணக்கில் தோற்கடித்தார்.
80 கிலோ பிரிவில் பூஜா ராணி வெண்கலம் வென்றார், நூபூர் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்திய ஆண் குத்துச்சண்டை வீரர்கள் பெரும்பாலும் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில், பெண் குத்துச்சண்டை வீரர்கள் மூன்று பதக்கங்களை வென்றனர்.