Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
South Rising
search-icon-img
Advertisement

இந்திய அணுசக்தி கழகத்தில் துணை மேலாளர்கள்

பணியிடங்கள் விவரம்

1. துணை மேலாளர்: (மனிதவளம்): 31 இடங்கள் (பொது-12,பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-11, எஸ்சி-4, எஸ்டி-2)

2. துணை மேலாளர்: (எப் அண்ட் ஏ): 48 இடங்கள்

3. துணை மேலாளர்: (சி மற்றும் எம்எம்): 34 இடங்கள். (பொது-14, பொருளாதார பிற்பட்டோர்-3, எஸ்சி-4, எஸ்டி-4, ஒபிசி-9).

4. துணை மேலாளர் (சட்டம்): 1 இடம் (பொது).மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு சம்பளம்: ரூ.56,100. வயது: 27.11.2025 அன்று 18 முதல் 30க்குள்.

5. ஜூனியர் இந்தி மொழி பெயர்ப்பாளர்; 8 இடங்கள்.(பொது-4, எஸ்டி-3, ஒபிசி-3).

ஐந்து பணிகளுக்கும் மொத்த இடங்களான 122ல் 9 இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி, தேர்வு முறை, கட்டணம், ஆன்லைனி்ல் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.npcilcareers.co.in மற்றும் www.npcil.nic.in ஆகிய இணையதளங்களை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025.