1. லோயர் டிவிசன் கிளார்க்: 25 இடங்கள். சம்பளம்: ரூ.19,900- ரூ.63,200. வயது: 18 முதல் 25க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
2. ஜூனியர் டெக்னிக்கல் இன்ஸ்ட்ரக்டர்: 2 இடங்கள். சம்பளம்: ரூ.25,000- ரூ.81,100. வயது: 21 முதல் 30க்குள். தகுதி; கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுடன் ஏதாவதொரு பிஎஸ்சி பட்டம்.
3. பல்நோக்கு பணியாளர்: 37 இடங்கள். சம்பளம்: ரூ.18,000- ரூ.56,900. வயது: 18 முதல் 25க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கடினமான பணிகளை செய்யும் ஆரோக்கியமான உடற்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
4. வாஷர்மேன்: 3 இடங்கள். சம்பளம்: ரூ.18,000- ரூ.56,900. வயது: 18 முதல் 25க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ராணுவ வீரர்களின் உடைகளை துவைப்பதில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. ஸ்டெனோகிராபர்- கிரேடு-2: 2 இடங்கள். சம்பளம்: ரூ.25,500- ரூ.81,100. வயது: 18 முதல் 25க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் சுருக்கெழுத்து எழுதி, அதை நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு அல்லது டிரேட் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் ஜெனரல் இன்டலிஜென்ஸ் மற்றும் ரீசனிங்/நியூமரிக்கல் அப்டிடியூட்/பொது ஆங்கிலம் ஆகிய பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். இதில் வெற்றி பெறுபவர்கள் திறன் தேர்வு அல்லது டிரேடு தேர்வுக்கு அழைக்கப்படுவர். தேர்வுக்கான அழைப்புக் கடிதம் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
www.indianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025.
