தகவல் ஆணையங்களின் சுயாட்சியை மீட்டெடுக்க இந்தியா கூட்டணி கட்சிகள் வலியுறுத்த வேண்டும்: ஜவாஹிருல்லா வேண்டுகோள்
சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ நேற்று வெளியிட்ட அறிக்கை: மோடி அரசாங்கத்தின் கீழ், தகவல் அறியும் உரிமைச் சட்டம் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது.தகவல் ஆணையங்களின் சுயாட்சியை மீட்டெடுக்க, தகவல் அறியும் உரிமை பயனர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்தஒன்றிய அரசை வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்த வேண்டும். உண்மையும் பொறுப்பேற்பும் எப்போதும் ரகசியம் மற்றும் அதிகாரத்தை விட மேலோங்கும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.