Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியா முழுவதும் இருந்து தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து ஆய்வு செய்ய டெண்டர்: 38 மாவட்டங்களிலும் நடைபெறும்

சென்னை: தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து ஆய்வு செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. அதன்படி, 38 மாவட்டங்களிலும் ஆய்வு நடைபெற உள்ளது. 2015-16ல் நடத்தப்பட்ட முந்தைய கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 67.74 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, 2025ம் ஆண்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கணக்கெடுப்பு மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ள, தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:

தங்கள் குடும்பத்தை விட்டுவிட்டு தமிழ்நாட்டிற்கு வருகை தந்து பணிபுரியும் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுடன் குடியேறிய தனிப்பட்ட புலம்பெயர்ந்தோர் மீது கவனம் செலுத்தும் இந்த கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் நடைபெறும். இந்த ஆய்வின் இலக்கு, பாதுகாப்பான வேலைகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை ஆகியவற்றை ஆய்வு செய்கிறது.

இதில் ஆந்திரா, மேற்கு வங்கம். உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் வடகிழக்கு பிராந்தியம் போன்ற இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து குடியேறியவர்கள் அடங்குவர். தனிப்பட்ட புலம்பெயர்ந்தோரின் செயல்முறை, ஆட்சேர்ப்பு முறை மற்றும் இடம்பெயர்வு வரலாறு ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்தும். புலம்பெயர்ந்தோரின் வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகளை பகுப்பாய்வு செய்யப்படும். இதில் வேலை செய்யும் இடம், வேலை நேரம், தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் பணியிட வசதிகளை புரிந்துகொள்வது அடங்கும்.

வாழ்க்கை நிலையில் அவர்களுக்கு வழங்கப்படும் தங்குமிடம், அவர்களின் உணவு மற்றும் பிற வாழ்க்கை செலவுகள் ஆகியவை அடங்கும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சுகாதார நிலைமைகளை புரிந்துகொள்ளப்படும். ஏனெனில் அவர்களில் பெரும்பாலோர் கடினமான மனஅழுத்த வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். சுகாதார பரிசோதனைகள் மற்றும் சுகாதார மையங்களின் வசதி மற்றும் கிடைக்கும் தன்மை ஆகியவை சுகாதார பிரச்சினைகளில் அடங்கும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சமூக நலனை புரிந்து கொள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளார்களா என்பதையும், அவர்கள் தங்கள் சொந்த மாநிலத்தில் ஏதேனும் திட்டங்களின் பயனாளிகளா என்பதையும் காண இது ஒரு நேரடி முயற்சியாக இருக்கும். தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவர்களின் பணி மற்றும் வாழ்க்கை நிலைமைகள் குறித்த கொள்கை பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு வழங்குவதே இந்த கணக்கெடுப்பின் இறுதி நோக்கமாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.