Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவை தொடர்ந்து மிரட்டும் டிரம்ப்; மோடியின் ‘கட்டித் தழுவல்’ கொள்கை என்னானது? காங்கிரஸ் தலைவர்கள் கடும் தாக்குதல்

புதுடெல்லி: ரஷ்யாவுடனான வர்த்தகத்தைக் காரணம் காட்டி டிரம்ப் விடுக்கும் மிரட்டல்களுக்குப் பிரதமர் மோடி பதிலளிக்காத நிலையில், அவரது வெளியுறவுக் கொள்கை வெறும் போட்டோஷூட் நிகழ்வுகளால் ஆனதா? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. ரஷ்யாவுடன் இந்தியா மேற்கொண்டு வரும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தைக் காரணம் காட்டி, இந்தியப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். இதுகுறித்து பிரதமர் மோடி பதிலளிக்காமல் மவுனம் காப்பதாகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ‘ஏற்கனவே நடைபெற்ற ‘ஹவுடி மோடி’, ‘நமஸ்தே டிரம்ப்’ போன்ற நிகழ்வுகள் யாவும் வெறும் போட்டோஷூட்டாக நடந்துள்ளன. இந்தியாவின் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கத் தவறிய வெறும் போட்டோஷூன் நிகழ்வுகள் என்றே கூறமுடியும்.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போரைத் தடுத்து நிறுத்தியதாக டிரம்ப் அடிக்கடி கூறி வருவதற்கும் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? மோடியின் ‘கட்டித் தழுவல்’ வெளியுறவுக் கொள்கை என்ன ஆனது? மோடியின் வெளியுறவு கொள்கையானது, வெளிநாட்டு அழுத்தங்களுக்கு இந்தியாவை ஆளாக்கி, அதன் மதிப்பை உலக அரங்கில் குறைத்துவிட்டது. டிரம்ப் அறிவிக்கும் வரி விதிப்பு மிரட்டல்களையும், இந்தியா-பாகிஸ்தான் பதற்றங்கள் குறித்து அவர் கூறும் கருத்துக்களையும் பிரதமர் மோடி வெளிப்படையாக எதிர்க்காததால், நாட்டின் இறையாண்மையைக் குறைத்து மதிப்பிடு செய்வதற்கு உடந்தையாக உள்ளார். இந்த விவகாரங்களில் பிரதமர் நேரடியாகப் பதிலளிக்கத் தவறியது, நாட்டின் அமைப்பு ரீதியான வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட பெரும் சரிவையே காட்டுகிறது’ என்று கூறினார்.

மேலும் இதே விவகாரம் குறித்து பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் பவன் கேரா, ‘டிரம்பின் வரிவிதிப்பு மிரட்டல்களை நிராகரித்து, இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும். நாட்டின் நலனை எக்காரணம் கொண்டும் சமரசம் செய்யக்கூடாது. மெக்சிகோ, கனடா போன்ற நாடுகள் அமெரிக்க வரிகளில் இருந்து தற்காலிக விலக்குகளைப் பெறுவதில் வெற்றி கண்டுள்ளன. ஆனால் இந்தியாவின் நிலை பலவீனமாகத் தெரிகிறது. ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், வாஷிங்டனில் நடத்திய பேச்சுவார்த்தைகளின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு இந்தியா பணிந்துவிட்டதா? என்ற சந்தேகம் எழுகிறது.