நியூயார்க்: இந்தியாவுடனான வர்த்தக பிரச்னைகளுக்கு அதிபர் டிரம்ப் தீர்வு காண வேண்டும் என அமெரிக்க வர்த்தக செயலாளர் லுட்னிக் கூறி உள்ளார். அமெரிக்க வர்த்தக செயலாளர் லுட்னிக் வௌ்ளை மாளிகையில் நிருபர்களிடம் கூறுகையில், “இந்தியா, சுவிட்சர்லாந்து, பிரேசில் போன்ற பல நாடுகளுடனான வர்த்தக பிரச்னையை அதிபர் டிரம்ப் சரி செய்ய வேண்டும். இந்த நாடுகள் தங்கள் சந்தைகளை திறந்து அமெரிக்க நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களை தவிர்ப்பதன் மூலம் அமெரிக்காவுக்கு சரியாக எதிர்வினையாற்ற வேண்டும்” என்றார்.
+
Advertisement