Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்கம்; வார்த்தைகளே வரவில்லை... மிக கடினமாக இருக்கிறது: கருண்நாயர் ஆதங்கம்

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் கருண் நாயர் பெயர் இடம்பெறாதது, அவரைக் கடும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்குத் திரும்பிய கருண் நாயர் அதில் பெரிதாக ரன் குவிக்கவில்லை. ரோகித் சர்மா, விராட் கோஹ்லி போன்ற மூத்த வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில், அணியின் மிடில் ஆர்டருக்கு அனுபவம் சேர்க்கும் முக்கிய வீரராக அவர் பார்க்கப்பட்டார். ஆனால், அந்தத் தொடரில் அவர் எதிர்பார்த்த அளவிற்குச் சோபிக்கவில்லை. 5 போட்டிகளில் ஆடிய அவர், 8 இன்னிங்ஸ்களில் 25.62 என்ற சராசரியுடன், ஒரே ஒரு அரைசதத்துடன் 226 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து தன்னை நீக்கியது குறித்து கருண்நாயர் பேசுகையில் “நான் நிச்சயம் அணியில் தேர்வு செய்யப்படுவேன் என்று எதிர்பார்த்தேன். இப்போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வார்த்தைகளே வரவில்லை. மிகவும் கடினமாக இருக்கிறது. தேர்வு குழுவின் இந்த முடிவுக்கு நீங்கள் தேர்வுக் குழுவினரிடம்தான் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்கவேண்டும். எனக்கு தெரிந்தவரையில், கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வேறு யாரும் ரன் அடிக்காத நிலையில், நான் 50 ரன்கள் அடித்தேன். கடினமான சூழலில் அடிக்கப்பட்ட அந்த அரைசதம், ஒரு சதத்திற்கு இணையானது என்று நான் நம்புகிறேன். இந்தியா வெற்றி பெற்ற அந்தக் கடைசிப் போட்டியில், அணிக்கு நான் பங்களித்ததாகவே நினைத்தேன்’’ என்று ஆதங்கமாக கூறினார்.