வாஷிங்டன்: இந்தியாவுக்கு மேலும் வரியை உயர்த்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு எண்ணெய்ப் பொருட்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்குவதால், இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்தப் புதிய வரி வரும் 7-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா தொடர்ந்தால், மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெள்ளை மாளிகை அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
இந்தியாவுக்கு மேலும் வரியை உயர்த்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஏற்கனவே 25% வரி விதித்துள்ள நிலையில் வரியை மேலும் உயர்த்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரஷ்யாவிடம் அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்குவதுடன் அதை சந்தையில் விற்று இந்தியா லாபம் ஈட்டுகிறது. ரஷ்ய தாக்குதலில் உக்ரேனியர்கள் உயிரிழப்பதை கண்டு இந்தியாவுக்கு கவலை இல்லை. அதனாலதான் இந்தியாவுக்கு மேலும் கூடுதல் வரியை விதிக்கவுள்ளேன் என்று கூறினார்.