Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் திறக்கிறது டெஸ்லா கார் நிறுவனம்..!

மும்பை: டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் திறக்கவுள்ளது. ஆட்டோமொபைல் துறையில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவிலும், தனது கார் ஷோரூமை தொடங்க டெஸ்லா திட்டமிட்டிருந்தது. அதன்படி, வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூலை.15) இந்தியாவில் தனது முதல் ஷோரூமை டெஸ்லா திறக்கவுள்ளது.

மும்பையின் குர்லா பகுதியில், ஆப்பிள் நிறுவனத்தின் ஷோரூம் அருகே 4000 சதுர அடியில் டெஸ்லா ஷோரூம் திறக்கப்படவுள்ளது. இந்த ஷோரூமுக்கு மாத வாடகையாக சுமார் ரூ.35 லட்சம் கொடுக்கவுள்ளனர். இதற்கான ஒப்பந்தம் 5 வருடங்களுக்கு போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், சீனாவில் தயாரிக்கப்பட்ட டெஸ்லா கார்களைத்தான் இந்தியாவில் இறக்குமதி செய்யவுள்ளதாகத் தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, டெல்லியின் ஏரோசிட்டி வளாகத்தில் தனது இரண்டாவது ஷோரூமை திறக்க டெஸ்லா திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இறக்குமதி வரி அதிகமாக இருந்த நிலையில், டெஸ்லா கார்களை விற்பனைக்கு கொண்டுவர சிரமமாக இருப்பதாக எலான் மஸ்க் முன்னர் கூறியிருந்தார். இதனிடையே, இறக்குமதி வரி 20 சதவிகிதம் குறைக்கப்பட்ட நிலையில், இந்தியாவிலும் டெஸ்லா கார்கள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.