ராஜ்கிர்: ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் நேற்று, இந்திய அணி, சீனாவுடன் மோதியது. இப்போட்டியில், துவக்கம் முதல் இந்திய வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடி தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினர். போட்டி துவங்கி, 4வது நிமிடத்தில் இந்திய வீரர் ஷீலானந் லக்ரா அணியின் முதல் கோலடித்து கணக்கை துவக்கி வைத்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. 2வது பாதியில் மேலும் 4 கோல்களை போட்ட இந்தியா, 7-0 என்ற கோல் கணக்கில் சீனாவை துவம்சம் செய்து வெற்றி வாகை சூடியது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த இந்தியா இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் கொரியாவுடன் மோதுகிறது.
+
Advertisement