பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த மமதா சிங் என்ற பெண் கடந்த மார்ச் 14ம் தேதி எடியூரப்பா மீது தனது 17 வயது மைனர் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிஐடி போலீசார் விசாரித்தனர். இந்த வழக்கின் விசாரணைக்காக எடியூரப்பா ஆஜராகாததால் அவருக்கு பெங்களூரு நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்தது. இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் எடியூரப்பா முறையிட்டார். இதையடுத்து, எடியூரப்பாவை கைது செய்ய போலீசுக்கு தடை விதித்ததோடு, வரும் 17ம் தேதி விசாரணைக்கு சிஐடி போலீஸ் முன் ஆஜராக எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டனர்.
Advertisement