புதுடெல்லி:கல்லூரி வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் முதலாமாண்டு மாணவர்களுக்கு மூத்த மாணவர்கள் டிஜிட்டல் துன்புறுத்தல் கொடுத்தாலும் அது ராகிங் ஆக கருதப்படும் என யுஜிசி அறிவித்துள்ளது. இதுகுறித்து யுஜிசி அதிகாரிகள் கூறுகையில், பல்கலைக்கழக மானியக் குழு,மூத்த மாணவர்கள் ஜூனியர் மாணவர்களைத் துன்புறுத்துவதற்காகப் பயன்படுத்தும் முறைசாரா வாட்ஸ்அப் குழுக்களைக் கண்காணிக்க உயர் கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்வி நிறுவனங்களில் ராகிங்கைத் தடுப்பதற்கான (யுஜிசி)யின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற டிஜிட்டல் துன்புறுத்தல்கள் ராகிங்காகக் கருதப்பட்டு கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உட்படும் என்றனர்.