லண்டன்: இங்கிலாந்தில் வாக்களிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைப்பதாக அந்நாட்டு அரசு நேற்று அறிவித்தது. இங்கிலாந்தில் கடந்த ஆண்டு தேர்தலின்போது வாக்களிக்கும் வயது 18ல் இருந்து குறைக்கப்படும் என்று தொழிலாளர் கட்சி வாக்குறுதி அளித்து இருந்தது. இந்நிலையில் தனது வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் வாக்களிப்பதற்கான வயதை 18ல் இருந்து 16ஆக குறைப்பதாக அரசு நேற்று அறிவித்துள்ளது.
புதிய திட்டத்தின் கீழ் தகுதியுள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதில் இருந்து தடுக்கப்படுவதில்லை என்பதை உறுதி செய்வதற்காக வாக்குச்சாவடிகளில் இங்கிலாந்து அரசு வழங்கிய வங்கி அட்டைகளை அடையாள அட்டையாக பயன்படுத்தவும் அரசு அனுமதித்துள்ளது. இது அதிக வாக்காளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதை மிகவும் எளிதாக்குகின்றது.