Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ.242 கோடி நிதி ஒதுக்கீடு: மக்களவையில் ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: மக்களவையில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் ஜி.செல்வம், சி என் அண்ணாதுரை ஆகியோரின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியதாவது: ராமேஸ்வரம் தீவு, தஞ்சாவூர், தேவலா (நீலகிரி மாவட்டம்), மாமல்லபுரம், வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் சுற்றுலாவை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதன்படி, 2024-25-ல் மாமல்லபுரத்தில் பாரம்பரிய பூங்காவான நந்தவன மேம்பாட்டுக்கு ரூ.99.67 கோடியும், தேவாலாவில் மலர் தோட்டத்திற்கு ரூ.70.23 கோடியும் ராமேஸ்வரம் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.20.01 கோடியும், 8 நவகிரக கோவில்கள் மேம்பாட்டுக்கு ரூ.40.94 கோடியும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் அலங்கார மின் விளக்கு அமைத்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.11.47 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.2023-24-ம் நிதியாண்டில் மாமல்லபுரத்தில் கடற்கரைக் கோவில் மேம்பாட்டுக்கு ரூ.30.02 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.