திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் 69 ஆயிரத்து 870 பக்தர்கள் தரிசனம் செய்தனர். உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது. அதில், ரூ.4 கோடி காணிக்கையாக கிடைத்தது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரமுள்ள கெங்கம்மா கோயில் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
Advertisement