திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 4ம் தேதி தொடங்கியது. பிரமோற்சவத்தின் 5ம் நாள் விழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி நேற்று காலை பாற்கடலில் மந்திரகிரி என்ற மலையை வாசுகி என்னும் பாம்பை கொண்டு தேவர்களும் அசுரர்களும் இணைந்து கடைந்து எடுத்த அமிர்தத்தை அசுரர்களிடம் இருந்து தேவர்களுக்கு மட்டும் கிடைக்க செய்யும் விதமாக மகா விஷ்ணு பெண் வேடத்தில் நாச்சியார் திருக்கோலத்தில் மோகினி அலங்காரத்தில் தோன்றி அமிர்தத்தை தேவர்களுக்கு கிடைக்க செய்தார்.

* திருப்பதியில் இன்று
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 6வது நாளான இன்று காலை அனுமந்த வாகனத்திலும், மாலை தங்க ரதத்திலும், இரவு கஜ வாகனத்திலும் மலையப்ப சுவாமி எழுந்தருளி அருள் பாலிக்க உள்ளார்.


