திருமலை: தெலங்கானா பாஜ தலைவர் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. ஐதராபாத் கோஷாமஹால் தொகுதிபாஜ எம்எல்ஏ ராஜா சிங் தலைவர் தேர்தலில் போட்டியிட தயாராக இருந்தபோதும், கட்சி மேலிடம் ஏற்கவில்லை.
அவருக்கு பதில் ராமச்சந்திர ராவ் நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எம்எல்ஏ ராஜா சிங் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து கடிதத்தை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு அனுப்பினார். இந்நிலையில் எம்எல்ஏ ராஜா சிங்கின் ராஜினாமாவை பாஜ தலைமை ஏற்றுக்கொண்டதாக நேற்று அறிவிப்பு வெளியானது.