புதுடெல்லி: கஜகஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு ஜூலை 3, 4 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளன. இந்நிலையில் பிரதமர் மோடியும், கஜகஸ்தான் அதிபர் காசிம் ஜோ மார்ட் டோகாயேவும் நேற்று தொலைபேசி மூலம் உரையாடினர். அப்போது, “உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான பொதுதேர்தலை வெற்றிகரமாக நடத்தி 3வது முறை பிரதமர் பதவி ஏற்ற உங்களுக்கு அன்பான வாழ்த்துகள்” என கஜகஸ்தான் அதிபர் தெரிவித்தார். இதற்கு பிரதமர் மோடி, “அதிபர் டோகாயேவின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. ஆஸ்தானாவில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு வெற்றி பெற இந்தியாவின் வாழ்த்துகள்” என்று கூறினார்.
Advertisement