திருமலை: ஆன்லைன் சூதாட்ட செயலியை விளம்பரம் செய்த நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர், நடிகை விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம் செய்ததாக நடிகர், நடிகை உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதியப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குனரகம் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஜய்தேவரகொண்டா உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது. அதில் வரும் 30ம் தேதி நடிகர் பிரகாஷ் ராஜ், ஆகஸ்ட் 6ம் தேதி விஜய் தேவரகொண்டா மற்றும் ஆகஸ்ட் 13ம் தேதி மஞ்சு லட்சுமி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Advertisement