Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சேறும் சகதியுமாக மாறிய தனியார் பேருந்து நிலையம்

சித்ரதுர்கா: சித்ரதுர்கா மாவட்டம், ஹொளல்கெரே தாலுகாவில், தனியார் பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி தாழ்வாக உள்ளதால், அங்கு செம்மண் போடப்பட்டுள்ளது. தற்போது தினமும் மழை பெய்து வருவதால் பேருந்து நிலையம், சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. பெங்களூரு, சிக்கமகளூரு, ஹாசன் வழித்தடங்களில் ஷிவமொக்கா, சித்ரதுர்கா, தாவணகெரே, ஹோசதுர்கா வழியாக இயக்கப்படும் பேருந்துகள் இந்த பேருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன.

ஒவ்வொரு நிமிடமும் பேருந்துகள் இங்கு வந்து செல்கின்றன மற்றும் ஆயிரக்கணக்கான பயணிகள் இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனர். ஆனால், நகரின் மையப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம் மோசமான நிலையில் உள்ளதால், பயணிகள் வெறுப்படைகின்றனர். இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரியாததால், பேருந்து நிலையம் குண்டும் குழியுமாக உள்ளது. பேருந்து நிலையத்தில் இருள் சூழ்ந்துள்ளதால், இரவு நேரத்தில் இங்கு பேருந்தில் ஏறி இறங்கும் பெண் பயணிகள் அச்சப்படுகின்றனர்.

இரவு நேரத்தில் குடிகாரர்களின் கூடாரமாக மாறி, மது அருந்தியவர்கள் பேருந்து நிலையத்தில் படுத்து உறங்குகின்றனர். மழை பெய்தால், பேருந்து நிலையம் முழுவதும் தண்ணீர் தேங்கி விடுவதால், பயணிகள் நனையும் நிலை உள்ளது. கால்நடைகள் பேருந்து நிலையத்தில் சாணம் மற்றும் குப்பை கொட்டுவதால், துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரம் இல்லாததால், ஈக்கள், கொசுக்கள் அதிகரித்து, அங்கு ஓரிரு நிமிடம் கூட உட்கார முடியாத நிலை உள்ளது. பேருந்து நிலையத்துக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். பேருந்து நிலையததில் மின் விளக்கு, கழிப்பறை, ஓய்வு அறை, தூய்மை இல்லை. இங்கு வர பயணிகள் அச்சப்படுகின்றனர்.