மோடியின் 3வது முறை ஆட்சியில் 100 நாட்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டம் என்ன? அனைத்து துறைகளுக்கும் அமைச்சரவை செயலர் கடிதம்
புதுடெல்லி: பிரதமர் மோடி தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளார். இந்த நிலையில் முதல் 100 நாளில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து அனைத்து துறை செயலாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த திட்டங்கள் குறித்து அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா அனைத்து துறை செயலாளர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். அதில், பிரதமர் மோடியின் யோசனைப்படி இந்த அரசின் முதல் 100 நாட்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் என்ன என்பதை பட்டியலிட வேண்டும். இதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு திட்டத்தையாவது கண்டறிய வேண்டும். அமைச்சகங்கள் தங்கள் கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும். உலக அளவில் பொருளாதார சக்தியில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பெறுவதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு அமைச்சகமும், துறையும் , அதை செயல்படுத்துவதற்கான முன்முயற்சிகள் மற்றும் யோசனைகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்து உள்ளார்.