அய்ஸ்வால்: மிசோரம் மாநிலம் சம்பாய் மாவட்டத்தில் மியான்மர் எல்லையையொட்டி உள்ள சோகாவ்தர் கிராமத்தில் அசாம் ரைபிள்ஸ் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாக்கு மூட்டைகளுடன் சந்தேகத்துக்கிடமாக சுற்றிய இரண்டு நபர்களை மடக்கி பிடித்து, சாக்கு மூட்டைகளை சோதனையிட்டனர்.
அதில் 3.33 லட்சம் அளவிலான மெத்தாம்பேட்டமைன் போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் அதன் மொத்த மதிப்பு ரூ.112.40 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே போதை மாத்திரைகளை எடுத்து வந்த இரண்டு பேரும் அங்கு ஓடும் தியாவ் ஆற்றில் குதித்து மியான்மருக்கு தப்பி சென்று விட்டனர்.