பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் கன்னடமொழியை பாதுகாக்க வேண்டுமானால் இரு மொழி கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் சித்தராமையாவுக்கு கன்னட வளர்ச்சி ஆணையத்தின் தலைவர் புருசோத்தம பிளிமலே கடிதம் எழுதியுள்ளார். கர்நாடக மாநில அரசின் கன்னட வளர்ச்சி மற்றும் பண்பாட்டு துறை கீழ் இயங்கி வரும் கன்னட வளர்ச்சி ஆணையத்தின் தலைவராக இருக்கும் புருசோத்தம பிளிமலே, முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதிவுள்ளார். அதில் கர்நாடக மாநிலத்தில் கன்னட மொழியை பாதுகாக்க வேண்டுமானால், இரு மொழி கல்வி கொள்கை தான் அவசியம் என்று பிரபல ஆய்வாளர் ரஷே் பெல்லம்கொண்டா, நாளிதழ் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையை மேற்கோள் காட்டியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் இரு மொழி கொள்கையை பின்பற்றினால், கிராமம் முதல் மாநகரங்கள் வரை இயங்கி வரும் பள்ளிகளில் கன்னடம் கட்டாயம் ஒருமொழி பாடமாக இருக்கும். அதன் மூலம் நமது மொழியை பாதுகாத்து கொள்ள வேண்டும். இரு மொழி கொள்கை தான் கர்நாடகாவில் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் கூறியுள்ளார்.
Advertisement