Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜம்மு காஷ்மீரில் கொட்டிய கனமழை: ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலை மூடல்

ஸ்ரீநகர்: இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. ஜம்மு காஷ்மீரிலும் பரவலாக மழை பெய்ய தொடங்கி உள்ளது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டம் செர்வான் படபால் பகுதியில் மேகவெடிப்பு காரணமாக தீவிர கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக அங்குள்ள வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதமடைந்தன. மேகவெடிப்பு காரணமாக மண் சரிவு ஏற்பட்டு சாலைகள் மூடப்பட்டுள்ளதால் போக்குவாரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு, மறுஅறிவிப்பு வரும் வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு குழுவினர் மண் சரிவில் சிக்கியவர்களை மீட்டனர்.