புதுடெல்லி: கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தியது. ராஜஸ்தான் மாநிலத்தில் அந்த மாநில பொது பணித்துறை இதற்கான பணியை மேற்கொண்டது. இந்தத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து ஜல்ஜீவன் திட்ட முறைகேடுகளில் நடந்த சட்டவிரோத பண மோசடி குறித்து அமலாக்கதுறை விசாரித்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் பியூஷ் ஜெயின் என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக ஜெய்ப்பூர், ஆல்வார்,நிம்ரானா, பெஹ்ரோர், ஷாபுரா ஆகிய இடங்களில் இவர்கள் தொடர்புடைய வீடுகளில் சோதனை நடத்தி ரூ.3 கோடி பணம், தங்க கட்டிகள், முக்கிய ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், பதம் சந்த் ஜெயினை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
Advertisement