Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உலகளவில் வெப்பம் அதிகரிப்பால் குழந்தைகள் 1.5 ஆண்டுகள் பள்ளி படிப்பை இழக்கின்றனர்: ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: கடும் வெப்ப அதிகரிப்பால் குழந்தைகள் ஒன்றரை ஆண்டுகள் வரை பள்ளி படிப்பை இழக்க நேரிடும் என ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவல் வௌியிட்டுள்ளது. இதுகுறித்து யுனெஸ்கோவின் உலகளாவிய கல்வி கண்காணிப்புக்குழு, காலநிலை தொடர்பு மற்றும் கல்வியை கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் திட்டம் மற்றும் கனடாவின் சஸ்காட்செவன் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து வௌியிட்ட அறிக்கை, “கடும் வெப்பம், காட்டுத்தீ, புயல்கள், வௌ்ளம், வறட்சி, கொடும் நோய்கள் மற்றும் கடல் மட்டம் உயர்வு போன்ற காலநிலை தொடர்பான பிரச்னைகள் குழந்தைகளின் கல்வியை பாதிக்கின்றன.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் காலநிலை பிரச்னைகளால் பள்ளிகளை மூடி வருவதால் கல்வி இழப்பு அல்லது இடைநிற்றல் அதிகரிக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளில் தீவிர வானிலை நிகழ்வுகளால் குறைந்தது 75 சதவீத பள்ளிகள் மூடப்பட்டதால், பல லட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. சராசரி வெப்பத்தை அனுபவிக்கும் குழந்தைகளை விட அதிக வெப்பத்தால் பாதிக்கப்படும் குழந்தைகள் ஒன்றரை ஆண்டுகளுக்கும் குறைவாகவே படிக்கும் சூழல் உள்ளது” என அதிர்ச்சி தகவலை வௌியிட்டுள்ளது.