ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம் சோபோரில் இருந்து ரியாசி மாவட்டம் தல்வாராவில் உள்ள பயிற்சி மையத்துக்கு நேற்று முன்தினம் காவலர்கள் பயிற்சிக்காக வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்த தலைமை காவலருக்கும், வாகன ஓட்டுரான மற்றொரு காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த தலைமை காவலர் தன்னிடமிருந்த ஏகே 47 ரக துப்பாக்கியால் வாகன ஓட்டுநரை சுட்டு கொன்றுள்ளார். பின்னர் தலைமை காவலரும் தன்னைதானே சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த வாகனத்தில் சென்ற மற்றொரு காவலர் எந்த காயமுமின்றி உயிர் தப்பி உள்ளார்.
Advertisement