மும்பை: இண்டிகோ நிறுவனத்தின் ஏ320 ரக விமானம் 6இ 6271, நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து கோவாவுக்குப் புறப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, இரவு 9.35 மணியளவில் இன்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, விமானம் மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்தைத் தொடர்பு கொண்டு அவசர நிலை குறித்து விளக்கப்பட்டது. தரையிறங்க அனுமதி கிடைத்ததும், இரவு 9.52 மணிக்கு விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.
Advertisement