மிட்னாபூர்: மேற்குவங்க மாநிலம் மிட்னாபூர் நகரில் நேற்று நடிகரும், பாஜ தலைவருமான மிதுன் சக்ரவர்த்தியின் பிரசார பேரணி மீது சிலரால் கற்கள் வீசப்பட்டன. அதைத் தொடர்ந்து அங்கு மோதல் வெடித்தது. மிட்னாபூர் மக்களவை தொகுதியில் மே 25ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் பாஜ வேட்பாளர் அக்னிமித்ரா பாலை ஆதரித்து நடிகர் மிதுன் சக்ரவர்த்தி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது சாலையோரம் நின்று இருந்த சிலர் ஊர்வலத்தின் மீது கண்ணாடி பாட்டில்கள் மற்றும் கற்களை வீசியதாக கூறப்படுகிறது. அதனால் இருதரப்பினருக்கும் மோதல் வெடித்தது. போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.