திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளம் பகுதியை சேர்ந்தவர் அஷ்ரப். இவரது மகள் ஹன்னா (11). 2 வாரத்துக்கு முன்பு சிறுமி பக்கத்து வீட்டு பூனையுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பூனை ஹன்னாவை பிராண்டியது. உடனே சிறுமியை பெற்றோர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தடுப்பூசி போட்டனர். 2வது தடுப்பூசிக்கு பிறகு ஹன்னாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிறுமி ஹன்னா நேற்று முன்தினம் இறந்தார். அவருக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
Advertisement