வதோதரா: குஜராத்தின் வதோதரா ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் விதமாக கட்டப்பட்ட கம்பீரா என்ற பாலம் கடந்த 9ம் தேதி காலை 7.30 மணிக்கு திடீரென்று இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தில் சென்று கொண்டிருந்த 2 லாரிகள், 2 வேன்கள், ஒரு ஆட்டோ ரிக்ஷா மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை ஆற்றுக்குள் விழுந்தன. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்து விட்டனர். இந்நிலையில் மாயமான ஒரு நபரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
Advertisement