Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பா.ஜவில் பிரதமர் வேட்பாளர் மோடிக்கு பிறகு யார்?கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்

புதுடெல்லி: ஆட்சி முடிவதற்குள் பிரதமர் மோடி 75 வயதை தாண்டுவதால், அவருக்கு பிறகு பிரதமர் வேட்பாளராக யார் இருப்பார்கள் என்பது குறித்து கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி தலைமையில், மூன்றாவது முறையாக ஒன்றியத்தில் பாஜ தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. தற்போது மூன்றாவது ஆட்சிக் காலம் முடிவதற்குள் பிரதமர் மோடி 75 வயதைத் தாண்டிவிடுவார் என்பதால், மோடிக்குப் பிறகு பாஜவின் பிரதமர் வேட்பாளராக யாரை நியமிப்பார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் ஆஜ் தக் மற்றும் சி-வோட்டர் இணைந்து ‘இந்தியா டுடே மூட் ஆப் தி நேஷன்’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட சர்வேயில், பாஜவில் மோடிக்குப் பிறகு யார் பிரதமர் வேட்பாளராக அல்லது பிரதமராக முடியும்? என்ற கேள்வி மக்களிடம் கேட்கப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களின் கருத்துப்படி, எதிர்காலத்தில் மோடிக்கு பிறகு அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களின் பெயரை மக்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் உள்துறை அமைச்சரான அமித் ஷாவுக்கு 25% பேரும், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு 19 சதவீதம் பேரும், ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு 13% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த மூன்று தலைவர்களுக்குப் பிறகு, ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒன்றிய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் தலா 5 சதவீத வாக்குகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். கருத்துக்கணிப்பில் அமித் ஷா முன்னணியில் இருந்தாலும், கடந்த பிப்ரவரி - ஆகஸ்ட் கருத்துக் கணிப்புகளுடன் ஒப்பிடும்போது அமித் ஷாவுக்கு 29% பேர் ஆதரவளித்த நிலையில் தற்போது அதற்கான அங்கீகாரம் 25 சதவீதமாக சரிவைக் கண்டுள்ளது.

* இப்போது தேர்தல் நடந்தால் யாருக்கு வாய்ப்பு?

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் பலம் பொருந்திய போதிலும், தற்போது மக்களவை தேர்தல் நடந்தால் யாருடைய ஆட்சி அமையும்? என்ற அடிப்படையில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 44 சதவீதம் ேபரும், ‘இந்தியா’ கூட்டணிக்கு 40 சதவீத பேரும், மற்றவர்களுக்கு 16 சதவீத பேரும் ஆதரவளித்தனர். ெமாத்தமாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 299 இடங்களும், ‘இந்தியா’ கூட்டணிக்கு 233 இடங்களும், மற்றவர்களுக்கு 11 இடங்களும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மோடிக்கு 49 சதவீத மக்களும், ராகுலுக்கு 22 சதவீதம் பேரும் ஆதரவளித்துள்ளனர்.