புதுடெல்லி: மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் சமயத்தில் பிரமாண்ட கொண்டாட்டத்தில் ஈடுபட காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நாடு முழுவதும் நடந்த மக்களவை தேர்தல் வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி 295 தொகுதிகளுக்கு மேல்வெற்றி பெறும் என்று கூறிவருகிறது. இதை தொடர்ந்து இந்தியா கூட்டணி வெற்றியை கொண்டாடவும், தேர்தல் ரிசல்ட்டை அறிந்து கொள்ளவும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
டெல்லியில் 24, அக்பர் சாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலக மைதானத்தில் கூடாரக் கம்பங்கள் அமைக்கப்பட்டு, அதன் பரந்த வளாகத்தைச் சுற்றி ராட்சத குளிரூட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் தேர்தல் முடிவுகளை நேரடியாக காணவும் பிரமாண்ட டிவிக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த முறை காங்கிரஸ் அதிக நம்பிக்கையுடன் அனைத்து பணிகளையும் செய்து வருகிறது.