புதுடெல்லி: கடந்த 1989ம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்கான விழா நடந்தது.அப்போது பாஜ பிரமுகர் காமேஷ்வர் சவுபால் கோயில் கட்டுவதற்கு முதல் செங்கல்லை நாட்டினார். பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த அவர் இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகளில் இருந்துள்ளார். சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் காலமானார். காமேஷ்வர் சவுபால் மறைவுக்கு பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Advertisement


