Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

‘இந்தியாவின் ஹீ-மேன்’ என்று அழைக்கப்பட்ட பிரபல பாடிபில்டரான நடிகர் மரணம்

அமிர்தசரஸ்: பிரபல பாடிபில்டரும், ‘இந்தியாவின் ஹீ-மேன்’ என அறியப்பட்டவருமான நடிகர் வரீந்தர் சிங் கும்மன் மாரடைப்பால் காலமானார்.‘இந்தியாவின் ஹீ-மேன்’ எனப் புகழ்பெற்றவரும், பிரபல பாடிபில்டரும், பஞ்சாப் நடிகருமான வரீந்தர் சிங் கும்மன் (42), நேற்று தனது தோள்பட்டை காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக அமிர்தசரஸில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு சென்றிருந்தபோது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.

அவரது திடீர் மறைவு, இந்திய விளையாட்டு மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் முதல் சைவ தொழில்முறை பாடிபில்டர் என்ற பெருமைக்குரிய வரீந்தர் சிங் கும்மன், கடந்த 2009ம் ஆண்டு ‘மிஸ்டர் இந்தியா’ பட்டத்தை வென்றார்.

மேலும், பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கரின் விளம்பரத் தூதராகவும் இருந்துள்ளார். இவர், ‘ரோர்: டைகர்ஸ் ஆஃப் தி சுந்தர்பன்ஸ்’ மற்றும் ‘டைகர் 3’ போன்ற பாலிவுட் படங்களிலும், ‘கபடி ஒன்ஸ் அகெய்ன்’ என்ற பஞ்சாபி படத்திலும் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு இந்திய திரைத்துறை மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.