புதுடெல்லி: கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம், இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் மற்றும் பிற நிறுவனங்கள் இணைந்து 2024-2025ம் ஆண்டு காட்டுத்தீயின் பாதிப்புகள் குறித்து பகுப்பாய்வு செய்தனர். இதன் அடிப்படையில் இந்தியா காட்டுத்தீயினால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகும். இந்தியாவில் கடந்த 2024-25ம் ஆண்டில் காட்டுத்தீயினால் 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2024-2025ம் ஆண்டில் மொத்தம் 3.7மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு உலகளவில் காட்டுத்தீயால் எரிக்கப்பட்டது ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
+
Advertisement