இந்தியாவின் ஜனநாயகத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம் பீகார் போர்க்கொடி தூக்கியுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
பீகார்: இந்தியாவின் ஜனநாயகத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம் பீகார் போர்க்கொடி தூக்கியுள்ளது என வாக்காளர் உரிமை யாத்திரை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சமூக நீதியின் அடையாளம் லாலு பிரசாத் யாதவ். பீகார் மக்களை பார்ப்பதற்காக 2000 கி.மீ.க்கு அப்பால் இருந்து வந்திருக்கிறேன். கலைஞரும் லாலுவும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். கடந்த ஒரு மாதமாக இந்தியாவே பீகாரைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது.