சென்னை : இந்தியாவில் வெறுப்புணர்வை ஒன்றிய பாஜக அரசு தூண்டுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்த்துள்ளார். குட்ஷெப்பர்ட் பள்ளி நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர், "சென்னையின் அடையாளமாக குட்ஷெப்பர்ட் பள்ளி இயங்கி வருகிறது. இந்தியாவில் மத நல்லிணகத்தை கெடுக்க நினைக்கும் கூட்டம் நெடுநாள் இருக்காது. பள்ளி நிகழ்ச்சிகளில் அறிவுரையையும், அரசியலையும் பேச வேண்டியுள்ளது. தமிழ்நாடு கல்வியில் முதன்மை மாநிலமாக திகழ அரசின் திட்டங்கள்தான் காரணம், "இவ்வாறு பேசினார்.
+
Advertisement