புதுடெல்லி: இந்தியா மற்றும் பஹ்ரைன் இடையே லட்சிய வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்க உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பஹ்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லதீப் பின் ரஷீத் அல்சயானி இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். இதனை தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் இரு நாட்டு வர்த்தகம் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பின் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், ”மின்னணுவியல், பெட்ரோலியம், பதப்படுத்தப்பட்ட உணவுகள், அடிப்படை உலோகங்கள், ரத்தினக்கற்கள் மற்றும் நகைகள் போன்ற துறைகளில் வர்த்தகத்தை மேலும் மேம்படுத்துவதற்கு இரு தரப்பினரும் இணைந்து பணியாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது ” என குறிப்பிடப்பட்டு இருந்தது.
+
Advertisement 
 
 
 
   