இந்தியா உட்பட விசா விண்ணப்பதாரர்களுக்கான கடுமையான புதிய ஆங்கில வழி தேர்வு தேவைகளை இங்கிலாந்து அரசு செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த தேர்வு பொறுத்தவரை பிரிட்டனில் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் அளவுக்கு இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. தங்கள் நாட்டில் அதிகரித்து வரும் குடியேற்ற அளவை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா உட்பட விசா விண்ணப்பதாரர்களுக்கான புதிய முறையை கொண்டுவர பிரிட்டன் முடிவு செய்துள்ளது.
அந்த வகையில் விசா விண்ணப்பதாரர்களுக்கான புதிய ஆங்கில மொழி தேர்வு தேவைகளை இங்கிலாந்து அரசு செவ்வாய் அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. புதிய செக்ஃயூர் இங்கிலிஷ் லாங்குஏஜ் டெஸ்டை பொறுத்தவரை உள்துறை அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பால் நடத்தப்படும் இதன் முடிவுகள் ஜனவரி 8 2026 முதல் அனைத்து திறமையான தொழிலாளர்களுக்கும் அடுத்தடுத்து விசா விண்ணப்ப செயல்முறையின் ஒரு பகுதியாக சரிபார்க்கப்படும். ஒரு விண்ணப்பதாரரின் ஆங்கிலம் பேசுதல், கேட்டல் மற்றும் வாசித்தல், எழுதுதல் ஆகியவற்றின் தரநிலை B2என குறிப்பிடப்படும். இது A நிலை அல்லது வகுப்பு 12க்கு சமமாக இருக்க வேண்டும்.
இது விண்ணப்பதாரர்கள் தங்கள் வாழ்க்கையை இங்கிலாந்தில் சிறப்பாக ஒருங்கிணைக்க முடியும் என்பதை உறுதி செய்யும் என்று உள்துறை அலுவலகம் நம்புகிறது. இந்த நாட்டிற்கு வந்து பங்களிப்பவர்களை இந்த நாடு எப்போதும் வரவேற்றுள்ளது. ஆனால் புலம்பெயர்ந்தோர் தங்களது மொழியை கற்று கொள்ள வருவது. ஏற்றுக்கொள்ள முடியாதது. அப்படி வருபவர்கள் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியாது என்று இங்கிலாந்து உள்துறை செயலாளர் ஷபானா கூறினார் . அரசாங்க திட்டங்களின் கீழ் சர்வதேச மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்த பிறகு கிராஜுவேட் லெவல் வேலையை கண்டுபிடிப்பதற்கான நேரமும் தற்போதைய 2 ஆண்டுகளை பொறுத்து 12 மாதங்களோ குக்கப்படும். ஜனவரி 1 2007 முதல் பட்டதாரி மாணவர்கள் 12 மாதங்கள் மட்டுமே இந்தியாவிற்குள் தங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.