Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புடினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு..!!

டெல்லி: இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புடினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ அனுவகுப்புடன் கூடிய சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு நாள் அரசுமுறை பயணமாக தனி விமானம் மூலம் இந்தியா வந்தடைந்த புதினை, பிரதமர் மோடி நேரில் சென்று உற்சாகத்துடன் வரவேற்றார். அதிபர் புதினுக்கு நேற்றிரவு அவர் சிறப்பு விருந்து அளித்​தார். அப்​போது இரு தலை​வர்​களும் முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்​தினர். இதன்​பிறகு டெல்லி ஐடிசி மவுரியா ஓட்​டலில் அதிபர் புதின் நேற்​றிரவு தங்கினார்.

இந்த நிலையில், குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் இன்று காலை ரஷ்ய அதிபர் புடினுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.புடினுக்கு பாரம்பரிய முறைப்படி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர். இதன்​பிறகு மகாத்மா காந்தி நினை​விடத்​தில் அதிபர் புதின் அஞ்​சலி செலுத்தினார். இதன்​ பிறகு டெல்​லி​யில் உள்ள ஹைத​ரா​பாத் இல்​லத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி​யும் அதிபர் புதினும் அதி​காரப்​பூர்​வ​மாக பேச்சுவார்த்தை நடத்த உள்​ளனர். அப்​போது பாது​காப்​பு, அணு சக்தி, தொழில்​நுட்​பம், வர்த்​தகம், விண்​வெளி உள்​ளிட்ட துறை​கள் தொடர்​பாக இரு நாடு​கள் இடையே 25 ஒப்​பந்​தங்​கள் கையெழுத்தாகும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

சென்​னை - விளாடிவோஸ்​டாக் தடம்:

இந்​தி​யா​வின் சென்னை மற்​றும் ரஷ்​யா​வின் விளாடிவோஸ்​டாக் நகரங்​களுக்கு இடையே புதிய கடல் வழித்​தடத்தை உரு​வாக்க திட்​ட​மிடப்​பட்டு உள்​ளது. இதே​போல ஈரானின் சபஹார் துறை​முகம் வழியி​லான வடக்​கு - தெற்கு வழித்​தடத்தை (ஐஎன்​எஸ்​சிடி) உரு​வாக்​கு​வது தொடர்பாகவும் பிரதமர் மோடி, அதிபர் புதின் முக்​கிய பேச்சுவார்த்தை நடத்த உள்​ளனர்.

ரஷ்ய அதிபர் மாளிகை செய்​தித் தொடர்​பாளர் திமித்ரி பெஸ்​பேசுகையில்,

சென்​னை - விளாடிவோஸ்​டாக் தடம், ஐஎன்​எஸ்​சிடி வழித்​தடம், சுகோய் எஸ்யு 57 போர் விமானம் ஆகியவை குறித்து பிரதமர் மோடி, அதிபர் புதின் முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்​து​வார்​கள். உக்​ரைன் போர் குறித்​தும் இரு தலை​வர்​களும் ஆலோ​சனை நடத்​து​வார்​கள் என்று தெரி​வித்​தார்.