Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இந்தியா, பாகிஸ்தான் மோதல் உள்பட 7 மாதத்தில் 7 போர்களை நிறுத்தினேன்: ஐநா சபையில் டிரம்ப் பரபரப்பு பேச்சு

ஐ.நா சபை: ஐநாவின் 80வது பொதுச்சபை நியூயார்க்கில் நடந்து வருகிறது. இங்கு உலகத்தலைவர்கள் பங்கேற்று பேசி வருகிறார்கள். நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ஐநா பொதுசபையில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நான் ஏழு மாத காலத்திற்குள், நான் ஏழு முடிவற்ற போர்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளேன். அவை தீராதவை. சில 31 ஆண்டுகளாக நடக்கிறது. ஒன்று 36 ஆண்டுகள் இன்னொன்று 28 ஆண்டுகளாக நடக்கிறது. இப்படி நான் ஏழு போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தேன். எல்லா சந்தர்ப்பங்களிலும் அங்கு மோதல் நடந்து வந்தன. எண்ணற்ற ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

இதில் கம்போடியா மற்றும் தாய்லாந்து, கொசோவோ மற்றும் செர்பியா, காங்கோ மற்றும் ருவாண்டா ஆகியவை அடங்கும். அதே போல பாகிஸ்தான் மற்றும் இந்தியா, இஸ்ரேல் மற்றும் ஈரான், எகிப்து மற்றும் எத்தியோப்பியா, ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு கொடூரமான போர்களை நிறுத்தி இருக்கிறேன்.

பேச்சுவார்த்தைகள் மட்டும் மோதல்களைத் தீர்க்காது.

தீர்க்கமான நடவடிக்கை மட்டுமே தீர்க்கும். ஐ.நா.வுக்கு மிகப்பெரிய ஆற்றல் உள்ளது. நான் எப்போதும் அதைச் சொல்லி வருகிறேன். அவர்கள் செய்வது எல்லாம் கடுமையான வார்த்தைகளால் ஆன கடிதங்களை வெளியிடுவதுதான். குடியேற்ற ஒடுக்குமுறையில் அமெரிக்காவின் வழியை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும். அமெரிக்கா உலகில் வணிகம் செய்ய சிறந்த நாடு.

அமெரிக்காவின் தற்போதைய பொருளாதாரம் எனது முதல் பதவிக் காலத்தை விட பெரியதாகவும் இன்னும் சிறப்பாகவும் உள்ளது. இது உலக வரலாற்றில் மிகப்பெரியது. அமெரிக்கா முன்பை விட மீண்டும் மதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். பாலஸ்தீனத்தை அங்கீகரித்தது பிரான்ஸ்: ஐ.நா. பொதுச் சபையில், நேற்று பிரான்ஸ், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தது.

* டிரம்ப் பயணத்திற்காக நடுரோட்டில் நிறுத்தப்பட்ட பிரான்ஸ் அதிபர்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும், அவரது குழுவினரும் சென்ற கான்வாய் நியுயார்கில் நடு வழியில் நிறுத்தப்பட்டது. காரில் இருந்து இறங்கிய மேக்ரான் அங்கிருந்த போலீஸ்காரரிடம் என்ன நடக்கிறது என்று கேட்்டார். அவரிடம் போலீஸ் அதிகாரி,’ அதிபர் டிரம்ப்்பின் வாகன அணிவகுப்பு இப்போது வருகிறது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது’ என்றார். அப்போது சாலையின் குறுக்கே உள்ள திசையை சுட்டிக்காட்டி, பிரெஞ்சு தூதரகத்திற்கு நடந்தே சென்றுவிடுகிறேன் என்று ேமக்ரான் கூறினார். ஆனால் அனுமதி அளிக்கவில்லை.

உடனே மேக்ரான் செல்போனில் டிரம்ப்பை தொடர்பு கொண்டு,’ எப்படி இருக்கீங்க? உங்கள் கான்வாய் வருவதால் போக்குவரத்தை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். நான் தெருவில் காத்திருக்கிறேன் என்று கூறினார். சிறிது நேரத்தில் டிரம்ப்பின் வாகன அணிவகுப்பு அப்பகுதியை கடந்தது. அதன் பிறகும் காருக்கு அனுமதி கிடையாது. பாதசாரிகளுக்கு மட்டும் அனுமதி என்று போலீசார் தெரிவிக்க அருகில் இருந்த பிரான்ஸ் தூதரகத்துக்கு விறுவிறுவென்று நடந்தே சென்றார் மேக்ரான். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

* உக்ரைனில் போர் நடத்த ரஷ்யாவுக்கு, சீனாவும் இந்தியாவும் நிதிஉதவி

டிரம்ப் பேசும் போது, ‘உக்ரைனில் நடந்து வரும் ரஷ்ய போருக்கு சீனாவும், இந்தியாவும் முதன்மை நிதி வழங்குபவர்கள். ரஷ்ய எண்ணெயை தொடர்ந்து வாங்குவதன் மூலம் அவர்கள் இதை தொடர்ந்து செய்கிறார்கள்’ என்றார்.